Local, News

அதிரடித் தீர்மானம்….

நேற்றைய கள விஜயத்தின் பின்னர் 2025.10. 05 சனிக்கிழமை இன்று காலை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் உட்பட்ட குளாம் மற்றும் கொழும்பு மாநகர சபை உப தவிசாளர், உறுப்பினர்கள் சகிதம் திருகோணாமலை மாவட்ட, முத்துநகர் விவசாயிகளின் விவசாயக் காணி அபகரிப்பு/ வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கு கொடுத்தமை தொடர்பாகவும், அதற்கு மாற்றீடாக அம்மக்களின் பூர்வீக பிரதான வீதியில் பள்ளிவாயிலை அண்மித்து அமைந்திருக்கும்  காணியை வழங்குவது சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண அனைத்து பள்ளி வாயில்கள் சம்மேளனம், அனைத்து மாவட்ட உலமா சபைகள், சங்கங்களின் தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்து அதனூடாக அரசாங்கத்திற்கு இப்பிரச்சினை சம்பந்தமாக தெளிவுபடுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வெகு விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு அதிரடி தீர்மானங்கள் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து இச்செய்ப்பாடுடன் திருகோணாமலை மாவட்ட மக்கள் நசுக்கப்படும் பிரச்சினைகளுக்கு அரசுடன் இணைந்து தீர்வுகளை எட்டுவதற்கான முழுமையாக ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

குறிப்பு: திருகோணமலை மாவட்ட மக்கள் அனைவரும் இன பேதமின்றி அதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு தயவாய் வேண்டிக் கொள்கின்றார்கள்.

(புல்லட் செய்திகளுக்காக கிண்ணியா நிருபர்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *