Blog
அமெரிக்க தளபதி ஈரானுக்கு எதிரான போரை எதிர்த்து பதவி விலகல்….
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர் ஜோ கென்ட், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாகப் பதவி விலகியுள்ளார்.
“ஈரானில் நடந்து வரும் போரை என் மனசாட்சிப்படி என்னால் ஆதரிக்க முடியாது,” என்று கென்ட், டொனால்ட் டிரம்புக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் X தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“ஈரான் நமது நாட்டிற்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க ஆதரவுக் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது.”

