Blog
அரசியல் தலையீட்டால் தடைப்படும் மக்களின் அபிவிருத்தி……
திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச சபை, இக்பால் நகர் வட்டாரத்தில் அமைந்துள்ள பெரிய குளம், வல்லுவர் கோட்டம், திருமால் புரம் போன்ற சிறிய கிராம மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை எனக் கூறி குச்சவெளி பிரதேச சபை மூலம் வரும் சிறிய சிறிய அபிவிருத்திகளை எக்காரணமும் இன்றி தடை செய்யும் இக்பால் நகர் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்; என அப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அப்படி நடைபெறுகின்ற ஒரு விடயம் தான் இந்த காணொளியில் பேசப்படுகின்ற வீதி மின்விளக்கு சம்பந்தப்பட்ட விடயமும் .
குச்சவெளி பிரதேச சபை செயலாளர் அவர்களே! இது உங்களின் கவனத்திற்கு.
உரிய தரப்பினர் குறித்த விடயத்தில் மக்களுக்கு நியாயமான தீர்வினை கொடுக்கும் வரை எமது ஊடகம் கண்காணிப்பில் ஈடுபடும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
(புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி
புல்லட் பிரீமன்)

