Blog
இரட்டை வேடத்தில் திருமலை பிரதியமைச்சர்…
2025.10.06 இன்றைய தினம் திருகோணாமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் முத்துநகர் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் 19 ஆவது நாளான இன்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவரும் (மிப்ளால் மௌலவி) , அவருடைய குழுவினரும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் மிப்ளால் மௌலவி அவர்கள் பல உண்மை தன்மைகளை வெளிப்படுத்தியதுடன் , பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் ஆரம்பத்தில் முத்துநகர் விவசாயிகளின் காணி விடயத்தில் நீதியாகவும் நியாயமாகவும் செயல்பட்டவர் தற்சமயம் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை சந்தித்த பின்னர் நீதமில்லாமல் அந்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில் நடந்து கொள்வது மாத்திரமின்றி அந்த மக்களிடமே நேரடியாக இந்த காணி உங்களுக்குப் பெற்றுத் தர முடியாது என கூறியுள்ளார்; இத்தகைய இவருடைய இரு முகங்களைக் கொண்ட , இரு வருடங்களைக் கொண்டு நடந்து கொள்வதானது மிகவும் வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.






