Blog
இலங்கை ஜனாதிபதியின் நேற்றைய உரையின் தொகுப்பு……
ஜனாதிபதி அநுரவின் நேற்றைய உரையில் நாடு இப்போது முகங்கொடுத்து கொண்டு இருக்கும் எரிபொருள் நெருக்கடி பற்றி விலாவரியாகக் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு அரசாங்கம் இந்த எரிபொருள் நெருக்கடியைச் எப்படியெல்லாம் சமாளிக்கப் போகிறது என்றும் ஜனாதிபதி அநுர விளக்கி இருந்தார்.
இந்த நாட்டுக்கு எப்படி ஒரு மைத்திரியோ, சஜித் பிரேமதாசவோ அதேபோல தான் அமெரிக்காவுக்கு ஒரு கோமாளி டிரம்பும்,
இஸ்ரேலுக்கு ஒரு நெத்தன்யாஹூவும்
கிடைத்து இருக்கிறார்கள்.
இந்த இரண்டு ஜந்துகளும் சேர்ந்து உலகம் பூராகவும் ஏற்படுத்தி விட்டிருக்கின்ற பெரும் நாசகார விளைவுகள் இந்த பாவபட்ட தீவையும் விட்டு வைக்கவில்லை.
ஆனால் இந்த நெருக்கடிக்கு அநுர அரசாங்கத்தினைப் பொறுப்புக்கூறக் கோருவது அபத்தமானது.
இது அரசாங்கத்தின் கையை மீறிய செயல். ஆனாலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அத்தனை விடயங்களையும் நேர்த்தியாக கையாள்கிறது இந்த அரசு.
இந்த நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளின் அடிப்படையே அரசாங்கத்தினை விமர்சிப்பது தான்.
ஆனால், எரிபொருள் நெருக்கடியில் அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புக்கள் இல்லை. இந்த நெருக்கடி நேரத்தில் விடயங்களை ஆராய்ந்து அறிந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.
மாறாக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் நடத்தும் அத்துமீறிய தாக்குதல்களுக்கு அநுர அரசு ஆதரவு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும் என்று ரமழான் இப்தார் நிகழ்வில் ரவூப் ஹக்கீம் போன்று பொறுப்பற்ற வகையில் பேசக் கூடாது.

