International, News

ஈரானின் முக்கிய இடத்தை வகித்த அலி லாரி ஜானி மரணித்து விட்டாரா???

யார் இந்த அலீ லாரிஜானி…?

ஈரானின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக, அதன் பாதுகாப்புக் குழுவின் செயலாளராக இருந்து வந்த அலீ லாரிஜானி ஷஹீதாகிவிட்டார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்)

மெத்தப் படித்தவர். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மார்க்க அறிஞர். ஃபிக்ஹு வல்லுநர். சிந்தனையாளர். சமுதாயத் தலைவர். அரசியல் ஞானி. செல்வாக்கு மிக்க லாரிஜானி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஈராக்கின் நஜஃப் நகரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் கொக்கரிப்புகளுக்கு, ‘புனிதமான ஈரானிய மண்ணில் சைத்தானின் சேவகர்களுக்கு இடம் இல்லை’ என்று ஓங்கி முழங்கியவர்.

போரை வேகமாக முடித்தாக வேண்டும் என்று டிரம்ப் படப்படத்த போது, ‘போரைத் தொடங்குவது எளிது. ஆனால் இரண்டு, மூன்று ட்வீட்களைக் கொண்டு போரை நிறுத்திவிட முடியாது. எத்துணை பெரும் தவறு இழைத்துவிட்டோம் என்று உம்முடைய மனம் தவிக்கின்ற வரை, தக்க இழப்பீட்டை உம்மிடம் வசூலிக்காத வரை நாங்கள் உம்மை விட மாட்டோம்’ என்று சொல்லி அதிரச் செய்தவர்.

ஹெக்சேத் என்கிற அமெரிக்க அமைச்சர் நச்சைச் கக்கிய போது, ‘ஈரானிய தலைவர்கள் அனைவரும் மக்களோடு மக்களாக மக்கள் மத்தியில் இருக்கின்றார்கள். ஆனால், உங்களுடைய தலைவர்களோ எப்ஸ்டீன் தீவில் இருக்கின்றார்கள்’ என்று அதட்டி வாயடைக்கச் செய்தவர்.

‘வீரஞ் செறிந்த மக்கள், வீரஞ்செறிந்த அதிகாரிகள், வீரஞ்செறிந்த தலைவர்கள் ஆகியோரைக் கொண்ட கூட்டணியை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது’ என்று ஓங்கி முழங்கியவர்.

இஸ்லாமிய சகோதரத்துவத்தின் மாண்பைச் சுட்டிக்காட்டி முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தவர்.

அல்லாஹ் அவருடைய பிழைகளைப் பொறுத்தருள்வானாக. சுவனத்தில் சேர்த்துக் கொள்வானாக. ஆமீன்.

(Azeez Luthfullah)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *