Blog
உலகை சுற்றிவரும் வரலாற்று முயற்சி
இலங்கை வந்தடைந்த 15 வயதான அவுஸ்திரேலிய இளம் விமானி
- உலகை சுற்றிவரும் வரலாற்று முயற்சி
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த Byron Waller) நேற்று முன்தினம் (17) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கினார்.
கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை (CIAR) வந்தடைந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரியவருகின்றது.
பைரன் 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்வதாக தெரியவருகின்றது








