Blog
காசநோய் மருத்துவம் திருமலை மாவட்ட வைத்திய சாலையில் இல்லையா???
திருகோணமலை, ஸ்ரீமாபுர கிராமத்தைச் சேர்ந்த பாரிய நோயான காச நோய் நோயாளி ஒருவரை திருகோணாமலை தள வைத்தியசாலையிலிருந்து எவ்வித அடிப்படை மருத்துவ வசதிகள் கூட நிறைவாக காணப்படாத கிராமப்புற வைத்தியசாலையான குச்சவெளி வைத்தியசாலையில் பொது மக்களுக்கு தெரியாமல் வைத்திருப்பது என்பது நோயாளிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது, பொதுமக்களுக்கும் தொற்று ஏற்படுத்தக் கூடியது என்ற அடிப்படை விடயத்தைக் கூட கருத்தில் கொள்ளாது வைத்திய குழுவினர் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் வேதனை அளிக்கிறது. என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஆதலால் இதற்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் குச்சவெளி மக்கள் இப்போதைக்கு குச்சவெளி வைத்தியசாலையில் அட்மிட் ஆகாமல் இருப்பது சிறந்தது.
(புல்லட் செய்திகளுக்காக நவீத் நஜாஹி)

