Local, News

கிண்ணியாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்….

கிண்ணியாவில் முன்னாள் அதிபர் ஓய்வூதியத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம்

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் முன்பாக முன்னாள் பாடசாலை அதிபர் அவ்வாபு இன்று தனது ஓய்வூதியம் வழங்கப்படாமல் தொடர்ந்து தாமதமாகி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் கையில் பிடித்திருந்த பதாகைகளில்,
“வலயக் கல்வி அலுவலகம் அதிகாரிகளின் அநீதி ஒழியட்டும்”,
“சாகும் வரை உண்ணாவிரதம் – ஓய்வூதியம் வழங்க மறுப்பது ஏன்?”
என எழுதியிருந்தது கவனத்தைக் குவித்தது.

தனது சட்டப்பூர்வமான ஓய்வூதிய உரிமை பல மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதனால் தான் இந்த கடுமையான போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் கல்வித்துறையினரிடமும் பொதுமக்களிடமும் கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அதிகாரிகள் இதற்கு உடனடி தீர்வு வழங்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *