Local, News

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் – விடுதலை கோரிக்கை மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது

மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பத்தில் தனது தீர்ப்பை 2026 ஜனவரி 30 ஆம் தேதி வழங்க திட்டமிட்டிருந்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உத்தரவு வழங்கத் தயாராக இல்லை என்று தெரிவித்ததால் இன்று (03) வரை அதன் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இன்று குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *