Blog
திருமலை வழக்கறிஞர் மகனுக்கு நடந்தது என்ன????
திருகோணமலையில் திங்கட்கிழமை (26) அன்று முதல் காணாமல் போயிருந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித்,(வழக்கறிஞர் லாஹிர் அவர்களுடைய மகன்) கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் நிட்டம்புவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவரின் மகனான குறித்த மாணவன் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார்.
சமுத்திரகம பகுதியில் குறித்த மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்கப்பட்டதுடன் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கடத்தல் காரர்களிடமிருந்து தந்திரமாகத் தப்பித்த மாணவன், அடி காயங்களுடன் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார். நிட்டம்புவ பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக விரைந்துள்ளனர்.
மாணவன் கடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

