Blog
நவீன பண மோசடி; சிக்கி விடாதீர்கள் இளைஞர்களே!
நவீன பண மோசடி; சிக்கி விடாதீர்கள் இளைஞர்களே!
##########################
நாட்டில் பல வகையான கோணங்களிலும் திருட்டுச் சம்பவங்கள், பண மோசடிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், தற்போது அதிகூடிய விலையில் உள்ள கையடக்கத் தொலைபேசிகளை மாதாந்த தவணையில் தருகிறோம் முற்பணம் செலுத்துங்கள் எனக் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்துகிறார்கள்;
பணத்தை மொத்தமாக செலுத்த முடியாத பலர் இதணைப் பார்த்து முற்பணம் செலுத்தி ஏமாற்றமடைகிறார்கள்; அந்த வகையில் எமது ஊடகத்திற்கு நிலாவெளியைச் சேர்ந்த ஒருவர் ஏமாந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நாம் பதிவிட்டிருக்கின்ற புகைப்படத்தில் காணப்படும் விளம்பரத்தைப் பார்த்து நிலாவெளியைச் சேர்ந்த ஒருவர் 2025.11.03 திகதி அன்று விளம்பரக்காரர்களின் வேண்டுகோளுக்கிணங்க முற்ப் பணம் செலுத்தியதிலிருந்து தொடர்பை துண்டித்து விட்டார்கள்.
இது சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு , செலுத்திய பணமும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே யாரும் இப்படியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
புல்லட் செய்திகளுக்காக நிலாவெளி கிப்னாஸ்


