Education, News

நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுதலையானார் யாஸீர் மௌலவி…..

நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுதலையானார் யாஸீர் மௌலவி…..

#

கடந்த 04 வருடங்களாக இந்திய, தமிழ்நாட்டு கிரைம் (Q) பிரிவினரால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாஸீர் மௌலவி மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராமநாதபுரம் பகுதியில் யாஸீர் மௌலவியும், அவருடைய மனைவியும் போலியான இந்திய கடவு சீட்டு மற்றும் தொலைபேசி அட்டைகள் என்றெல்லாம் பல போலியான குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டிருந்த தம்பதியினர் 2026.02.17 நேற்றைய தினம் ராமநாதபுர நீதிமன்றத்தினால் குற்றமற்றவர்கள், நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்; இன்ஷாஹ் அல்லாஹ் வெகு விரைவில் அவர்கள் சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மேலும் இவர்களுடைய நீதிமன்ற விடயங்களில் முஸ்லிம் அல்லாத சகோதர இன வழக்கறிஞர்கள் பலர் ஆதரவாக நின்று இவர்களுடைய உண்மைத் தன்மையை நீதிமன்றிற்கு எடுத்துரைத்து இவர்களுக்கு நீதி கிடைக்க செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறிப்பு:- இந்த விடயத்தில் உண்மையான செய்தியை தவிர்த்து உண்மைக்கு புறம்பான செய்திகளை இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான சில நாசகார சங்கி ஊடகங்கள் பிரசுரித்து வருகிறது என்பதனை தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்பதனை வாசகர்கள் புரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *