Local, News

பதவி உயர்வும் இறுதி கிரிகையும்…

உயிரிழந்த விங் கமாண்டர் குரூப் கேப்டனாக பதவி #உயர்வு எதிர்வரும் 04ஆம் திகதி அஞ்சலி!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் பதவிநிலை உயர்த்தப்பட்டது.

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டரின் தலைமை விமானியான விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய அவர்கள் லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் மரணமடைந்த்தார்.

அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2025 நவம்பர் 30 முதல் விங் கமாண்டர் பதவிநிலையில் இலிருந்து குரூப் கேப்டன் பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

அவரது உடல் இன்று லுனுவில இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலையில் இரத்மலானை இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் விமானப்படையின் பூரண முழு மரியாதையுடன் எதிர்வரும் 04 ம் திகதி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *