Blog
பரபரப்பை ஏற்படுத்திய உடுப்பு பெட்டி….
திருமலை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (10) காலை பரபரப்பை ஏற்படுத்திய பெட்டியில் வெறும் உடுப்புகள் மாத்திரமே இருந்தன.
திருகோணமலை பஸ் தரிப்பிடத்தில் 10-02-2025 இன்று காலை ஏற்பட்ட அமைதியை கலைத்தது ஒரு நீல நிற சூட்கேஸ்.
பயணிகளின் நடமாட்டம் வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், தரிப்பிடத்தின் மேடை ஓரத்தில் யாரும் அருகில் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது. உரிமையாளர் தெரியாத நிலையிலும், நீண்ட நேரமாக அங்கு அசையாமல் இருந்ததாலும், அது சந்தேகத்திற்குரிய பொருளாக கருதப்பட்டது.
இதையடுத்து உடனடியாக தகவல் பெறப்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரணை ஆரம்பித்தனர்.
மக்கள் தேவையற்ற வதந்திகளை பரப்பாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.




