Blog
பலஸ்தீன யாசக பெண்மணி விடயத்தில் கொழும்பு பொலிஸாரின் அராஜக செயல்; ஆதரவளித்த சுமார் 30 பேர் கைது…..
பலஸ்தீன யாசக பெண்மணி விடயத்தில் கொழும்பு பொலிஸாரின் அராஜக செயல்; ஆதரவளித்த சுமார் 30 பேர் கைது…..
23.02.2026 நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் இரண்டாம் குறுக்குத் தெருவில் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கின்ற போது கொழும்பு புறக்கோட்டை போலிசார் வாகனத்தில் வந்து உங்களை விசாரிக்க வேண்டும் வாருங்கள் என்று பலாத்காரம் பண்ணிய போது அங்கிருந்த மக்கள் போலீசாரிடம் அவர்களை கூட்டிச் செல்ல வேண்டாம் என வாக்குவாத பட்டுள்ளனர்; அதனை அடுத்து அந்தப் பெண்ணும் இரு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்; போலீசார் மீண்டும் அங்கிருந்த மக்களை தங்களுடைய கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுமார் 30 நபர்களை அராஜகமாக, தீய மற்றும் கொடூரமான வார்த்தைகளால் திட்டி அநியாயமான முறையில் கைது செய்து புறக்கோட்டை போலீசிற்கு கொண்டு சென்று சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு பிற்பாடு 23 நபர்களை பொலிசிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு மேலும் இரு நபர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்; ஏனைய 09 நபர்களையும் இன்று கொழும்பு நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்திய பிற்பாடு நான்கு நபர்களுக்கு எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையிலும் , மீதி 5 பேரை எதிர்வரும் 11ம் தேதி வரையிலும் விளக்கம் மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புல்லட் செய்திகளுக்காக: கொழும்பு புல்லட் செய்தியாளர்.

