Blog
2025.12.4 நாளை மாலை வரை சேகரிக்கப்படும்….
2025.12.4 நாளை மாலை வரை சேகரிக்கப்படும்….
#############################
கிண்ணியா , அல் – அக்ஸா மத்திய கல்லூரி 2026 A/L வகுப்பு பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து கிண்ணியாவிற்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கும் முகமாக தாங்கள் ஒவ்வொருவரிடமும் காணப்பட்ட சிறிய தொகை பணத்தை வைத்து சிறியதாக கொடுக்க முயற்சித்த போது மக்கள் தங்களால் முடிந்த உலர் உணவுப் பொருட்களை அந்த மாணவர்களிடம் கொடுத்து அதனை பெரிய அளவில் செய்வதற்கான ஆதரவினை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் அந்த மாணவர்கள் நாளை காலையில் இருந்து மாலை 6 மணி வரை சேகரிக்கும் பணியை தொடர உள்ளார்கள்.
எனவே அன்பார்ந்த மக்களே உங்களிடம் காணப்படும், அல்லது நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தால் அந்த மாணவர்களிடம் கொண்டு கொடுங்கள் .
நாளை ஒரு தினம் மாத்திரமே.
சேகரிப்பு நிலையம்:- தி/ கி/அல் – அக்ஸா மத்திய கல்லூரி நுழைவாயில்.
#தர்மம் தலைகாக்கும் தக்க தருணத்தில் உயிர் காக்கும்.









