Local, News

குச்சவெளி பிரதேச தவிசாளருடைய சகோதரனின் கட்டுமான பணியை இடை நிறுத்திய மாநகர சபை!!!!!

11.08.2026 இன்று குச்சவெளி பிரதேச சபை தவிசாளருடைய வெளிநாட்டில் உள்ள உடன் பிறந்த சகோதரர் அமீன் அவர்கள் திருகோணமலை மாநகர சபைக்கு உட்பட்ட, சிங்கள மகா வித்தியாலயத்திற்க்குப் பின்னால் அமைந்துள்ள கொத்தி ஒழுங்கை பகுதியில் தனக்குச் சொந்தமான இடத்தில் மாநகர சபையின் அனுமதியை பெறாமல் நுழைவாயிலை அமைத்துக் கொண்டிருந்த வேளையில் விடயம் அறிந்த நகர சபை அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று கட்டுமானப் பணியை இடை நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது வேறொரு முறையில் அதிகாரம் மேலோங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம் நகர சபை மேயர் தொடர்ந்தும் இந்த விடயத்தில் சட்டத்தை பின்பற்றுவாரா என ?

(புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *