Local, News

NPP க்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்துவிட்டு இன்று கவலைப்படும் எம்பி ஆதம்பாவா…..

சுமார் 88,000 வாக்குகளை கண்ணை மூடி கொடுத்துவிட்டு இன்று மிகவும் கவலைப்படும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா!

கடந்த தேர்தலில் சுமார் 88,000 முஸ்லிம் வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றிபெறாது நான்கு சிங்கள வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து சாதனை படைத்தவர்கள் இன்று கவலையடைகிறார்கள்.

இருந்தும் தனக்கு அல்லாது அம்பாறை மாவட்டத்திற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் தேசிய பட்டியல் மூலம் அந்த இடத்தை நிரப்ப நியமிக்கப்பட்ட ஆதம்பாவா தனது முதலும் கடைசியுமான இந்த ஆட்சிக்காலத்தில் குறைந்தபட்சம் தனது காலடியில் உள்ள மக்களின் உரிமையைக்கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதன் காரணத்தால் இன்று “தான் உண்மையில் கவலையடைவதாகவும், தான் அங்கம் வகிக்கும் ஆளுங்கட்சியின் முடிவை தான் எதிர்பார்க்கவில்லை” என்றும் ஏதோ எதிர்க்கட்சி உறுப்பினர் போன்று பேசுகிறார்.

கடந்த மாதங்களில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் தாங்கள் ஒன்றாக இயங்கப்போவதாக அறிவித்து ஒன்றுகூடிய அடுத்த சில நாட்களிலேயே இவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த சதிகள் மேற்கொள்ளப்பட்டுகிறது என்பதன் பின்னாலுள்ள அரசியலை புரியாத ஆதம்பாவா எம்பி அவர்கள் இன்று இந்த சதியையும் எதிர் அணியின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்.

ஆனால் இங்கு இந்தப் பிரச்சினை இந்த அளவுக்கு பெரிதாக வளர்வதற்கு அத்தனைக்கும் காரணம் இன்றைய அரசாங்கத்தின் திட்டமிட்ட தாமதமும், அதன் பின்னர் வழங்கியிருக்கும் தற்காலிக இடமாற்றம் என்னும் முறையற்ற தீர்வுமாகும் என்பதை முழு நாடும் அறிந்தும் அவர் இன்னும் எதிர் தரப்பினரை குற்றம் செல்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்பி என்பதே!

முபீத் அக…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *