Blog
ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகளின் A/L பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்தியது அடிப்படை உரிமை மீறல் – மனித உரிமைகள் ஆணைக்குழு
ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகளின் A/L பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்தியது அடிப்படை உரிமை மீறல் – மனித உரிமைகள் ஆணைக்குழு
ஹிஜாப் (தலையை மூடும் தளர்வான சால்வை) அணிந்திருந்த காரணத்தால், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர (A/L) பரீட்சை பெறுபேறுகள் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த சுமார் 70 முஸ்லிம் மாணவிகளுக்கு வெளியிடப்படாமல் தாமதப்படுத்தப்பட்டமை, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தீர்மானித்துள்ளது.
மாணவிகள் பரீட்சை விதிகளை மீறியதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவர்களின் காதுகள் பரீட்சை விதிகளுக்கு ஏற்ப தெளிவாகத் தெரிந்ததாக சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பெறுபேறுகளைத் தாமதப்படுத்துவதற்கு முன் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் கண்டறிந்துள்ளது.
இந்த நடவடிக்கை, மாணவிகளின் மதச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதனையடுத்து, சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்துதல், மத ஆடைகளை அணியும் மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் தெளிவான சுற்றறிக்கைகளை வெளியிடுதல், மேலும் பரீட்சை நிலையங்களில் போதுமான பெண் கண்காணிப்பாளர்கள், குறிப்பாக தமிழ் மொழி அறிந்த பெண் கண்காணிப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) .

