Blog
300 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு MP ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று……
திருகோணமலை மாவட்டத்திலிருந்து 2025ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட 300 மாணவர்களையும், க.பொ.த.(சாதாரணதர) பரீட்சையில் 9 A சித்தி பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று (16), ஞாயிற்றுக்கிழமை மூதூர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மூதூர் அனர்த்த நலன்புரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அதன் தலைவரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான முகம்மது யூசுப் லாபிர் தலைமை தாங்கினார்.
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும், ஏனைய அதிதிகளும், பிரமுகர்களும், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுடன் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இருந்து பாரம்பரிய முரசொலி(பறை வாத்தியம்), மயிலாட்டம் மற்றும் சீனடி உள்ளிட்ட அம்சங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, விழா இடம்பெற்ற மூதூர் கலாசார மண்டபத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து பல்வேறு கலை, கலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த மாணவர்கள் நினைவுச் சின்னங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன், ஏனைய அதிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். உதுமாலெப்பை, உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் இவற்றில் கலந்து கொண்டனர்.
