Blog
அமெரிக்காவுடனான நெருக்கமான உறவு குறித்து பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய இராணுவ ஒருங்கிணைப்பு, இஸ்ரேல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (ஏப்ரல் 13, 2026) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்காவுடன் தினசரி அடிப்படையில் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகத்துடன் இஸ்ரேல் கொண்டுள்ள புரிந்துணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு, இஸ்ரேல் உருவானது முதல் இன்றுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்தார்.
ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முடக்கும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கைக்கு இஸ்ரேல் முழு ஆதரவு அளித்துள்ளது. ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதே இந்த தீவிர நடவடிக்கைக்குக் காரணம் என அவர் கூறினார்.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்களுக்கு இஸ்ரேல் பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும்,
“போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை” என அவர் எச்சரித்தார். எந்நேரமும் போர்நிறுத்தம் முடிவுக்கு வரக்கூடும் என்பதால் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரானுடன் மறைமுக உடன்பாடுகள் எட்டப்பட்டாலும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என அவர் உறுதியாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் போது, இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ அமைப்பின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்படுவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
#சர்வதேசசெய்தி

