Local, News

கிழக்கில் 600 முஸ்லிம் பொலிஸார் கடத்திச் சென்று படுகொலைகள் செய்யப்பட்ட நாள் இன்று (1990 ஜுன் 11) 36 வருடங்கள்….

கிழக்கில் 600 முஸ்லிம் பொலிஸார் கடத்திச் சென்று படுகொலைகள் செய்யப்பட்ட நாள் இன்று (1990 ஜுன் 11) 36 வருடங்கள்.

1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலை புலிகளுடன் தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் முஸ்லிம்களாவர்.

கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைத்த 800 பொலிஸாரின் உயிர் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி தாரைவார்க்கப்பட்டது.

சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகு@தியில் உள்ள ஒரு காட்டுப்பகுதி சமவெளியில் வைத்து LTTE யின் பொலீஸ் பிரிவுக்கு பொறுப்பாய் இருந்த நடேசனின் மேற்பார்வையில் 800 பொலிஸ் அதிகாரிகளும் நிர்வாணப்படுத்தி கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்பட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சுடப்பட்டு பின்னர் ஒரே கிடங்கில் போட்டு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியது.

இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு பட்டும் இரண்டு பொலிஸார் உயிர் தப்பியிருந்தனர்.

1994 சந்திரிகா பண்டாரநாயக ஜனாதியானதும் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆனைக்குழுவில் இந்த கிழக்கின் பொலிஸ் கொலை சம்பந்தமாக இவ் இருவரும் மாத்திரம் தான் இந்த சம்பவத்தில் இறுதிக் கட்டத்தில் மரணத்தின் விளிம்பில் தப்பியவர்களாக சாட்சியம் அளித்தார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் பொலிஸாரின் இந்த படுகொலைகளை சாதாரணமாக விடுதலைபுலிகள் செய்த கொலைகளுடன் இதுவும் ஒன்றாக கருத முடியாது. இந்த படுகொலைகள் அரச அனுசரனையில் விடுதலைப்புலிகள் நடத்திய கொலைகளில் மிகப்பெரிய படுகொலையாகும் எனக் கருதப்படுகிறது.

இன்று 2026 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11 ஆம் திகதியோடு 36 வருடங்கள் கழிந்தும் இன்னும் இதன் மர்மங்கள் சரியாகத் துலக்கப்படவில்லை. மக்கள் மனதில் இருக்கும் இது குறித்த கேள்விகள் அகலவில்லை.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜெரத்னவும் முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவும் விடுதலைப்புலிகளின் தலைமைகள் மாத்திரமே இந்த முஸ்லிம் பொலிஸ்காரர்களை சரணடைய வைத்து புலிகளால் கடத்திச் சென்று அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு கொல்ல செய்யப்பட்டதற்கான மர்மங்களை அறிவார்கள்.

விடுதலைப்புலிகளின் கிழக்கு கட்டளை தளபதியாகச் செயல்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருனா அம்மான்) மஹிந்த அரசில் பல முக்கிய பதவிகள் மற்றும் அமைச்சுக்கள் பொறுப்பாக இருந்தும் இந்த கொலைகளுக்குரிய பின்னனியை அந்த அரசு கண்டறிய தவறிவிட்டது கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் இடம்பெற்ற இந்த கொலைக்களம் இன்று (2026.06.11) 36 வருடங்கள் கடந்துள்ள பிறகும் இவ்விடயத்தை எம்மால் எளிதாக மறந்துவிட முடியாது .

1990 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்த 600 க்கும் மேற்பட்ட இலங்கை (முஸ்லிம் ) பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகளினால் (LTTE) கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கை வரலாற்றில் பொலிஸ் திணைக்களம் எதிர்கொண்ட மிகத் துயரமான மற்றும் மிகப்பெரிய கூட்டாண்மைப் படுகொலையாக இந்த 1990 இலங்கை பொலிஸ் அதிகாரிகள் படுகொலை சம்பவம் கருதப்படுகிறது.

1990 ஜூன் 11 அன்று காலை கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று , சம்மாந்துறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பல பொலிஸ் நிலையங்களை விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.

அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் மா அதிபர் (IGP) ஏர்னஸ்ட் பெரேரா கிழக்கு மாகாண பொலிஸாரை புலிகளிடம் சரணடையுமாறு அன்று ஏனோ கட்டளையிட்டிருந்தார்.

அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாட்டின்படி தங்களுக்குப் எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது என்ற அரசியல் தலைமையின் வாக்குறுதியை நம்பி, பொலிஸார் தங்களது ஆயுதங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்துச் சரணடைந்தனர்.

சரணடைந்த பொலிஸ் அதிகாரிகளில் சிங்களவர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 600 முதல் 774 அதிகாரிகள் வரை பிணைக்கைதிகளாகக் இவ்வாறு கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் திருக்கோவில், ரூபஸ்குளம் மற்றும் மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குப் பஸ்கள் மூலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில் தரையில் படுக்க வைக்கப்பட்டு, வரிசையாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டதாக உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து, இரண்டாம் கட்ட ஈழப்போர் (Eelam War II) உத்தியோகபூர்வமாக வெடித்தது.

இந்தத் தாக்குதலை அப்போதைய புலிகளின் கிழக்கு மாகாண தளபதியான வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

– ஏ.எல்.ஜுனைதீன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *