Local, News

தொடரும் சீனக்குடா பொலிஸாரின் அடாவடி…

தொடரும் சீனக்குடா பொலிஸாரின் அடாவடி…
############################
09.06.2026 செவ்வாய்க் கிழமை இரவு நேரத்தில் அங்குள்ள விவசாயிகளின் விவசாயக் காணிகளை அடாவடியாக அபகரித்திருக்கும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவான திருகோணாமலை,சீனக்குடா பொலிஸார் சிலர் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு கொந்தராத்துக்காரராக செயற்படும் சாந்த பண்டார எனும் மிகப் பெரும் பணக்காரருடைய வாகனத்தில் வந்து JCB இயந்திரத்தை யார் உடைத்தது ? என வீடு வீடாக கேட்டு கிராம மக்கள் வீடுகளுக்குள் புகுந்து மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி திரிந்து கொண்டிருக்கின்ற போது கிராமத்துப் பாதையால் அஸ்மிர் என்ற நபர் திடீர் சுகையீனமுற்ற தனது மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முகமாக தனது நண்பனின் மோட்டார் சைக்கிளை கொண்டு சென்ற போது அவரை அடாவடித்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டு  JCB எந்திரத்தை சேதப்படுத்திய குற்றவாளியாக மாற்ற முயற்சி செய்ததாக கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கம் உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கை எடுத்து முத்து நகர் மக்களுக்கு விடிவு வழங்குமா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *