Local, News

தாங்க முடியாத கடுமையான வாழ்க்கைச் செலவுக்கு எதிராக பாரிய ஆர்பாட்டம்!

பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்!

மக்கள் போராட்டம் இயக்கத்தினால் (Jana Aragalaya) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நேற்று (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த எதிர்ப்புப் பேரணியின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் IMF நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி தடுத்ததால் மோதல் வெடித்தது. பொலிஸாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் உருவானது.

நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *