Blog
அர்ச்சுனா MP யின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு….
🔹
2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தனது பாராளுமன்ற சம்பளப் பட்டியல்களின் விபரங்களை பகிர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ஜூன் மாதத்தில் ரூ. 179,707.93 ஆக இருந்த தனது மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு ஜூலை மாதத்தில் ரூ. 244,300.46 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்த அதிகரிப்பானது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவுகள் கணக்கில் வரவு வைக்கப்படுவதைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரால் பகிரப்பட்ட ஆவணங்களின்படி, இவ்விரு மாதங்களுக்கும் இடையே எரிபொருள் கொடுப்பனவு சுமார் ரூ. 64,600 ஆல் அதிகரித்துள்ளதுடன், அவரது மொத்த மாதாந்தக் கொடுப்பனவும் ஜூன் மாதத்தில் இருந்த ரூ. 412,492.93 இலிருந்து ஜூலை மாதத்தில் ரூ. 484,585.46 ஆக உயர்ந்துள்ளது.
