Local, News

பௌத்த சமூகத்தின் மத நம்பிக்கைகளை மதித்து எமது மத செயற்பாடுகளை மேற்கொள்வதில் எந்த தடங்களும் கிடையாது.

பௌத்த சமூகத்தின் மத நம்பிக்கைகளை மதித்து எமது மத செயற்பாடுகளை மேற்கொள்வதில் எந்த தடங்களும் கிடையாது.

(பிரதியமைச்சர் முனீர் முளௌபர்)

ஹஜ் பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் உழ்ஹிய்யா (குர்பான்) கடமையை இந்த வருடமும் நிறைவேற்றுவதில் எந்தத் தடையும் கிடையாது என சமய விவகார பிரதி அமைச்சர் சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் இரண்டாம் திகதி வரை பெசாக் வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஹஜ்ஜுடன் தொடர்புடைய முக்கிய விடயமான உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதில் தடங்கள் ஏற்படும் என சந்தேகங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் நிலையில் இது விடயமாக கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்..

பௌத்த மக்களின் முக்கிய தினமான வெசாக் தினம் ஹஜ் பெருநாள் தினத்தில் அனுஷ்டிக்கபடுகிறது. இது பௌத்த சமூகத்தின் முக்கிய நாள் என்பதால் பௌத்த சமூகத்தின் மத நம்பிக்கைகளை மதித்து, எமது மத செயற்பாடுகளை மேற்கொள்வதில் எந்த தடங்களும் கிடையாது. இதற்கு முன்னரும் ஹஜ் பெருநாளும் போயா தினமும் அருகருகே கொண்டாடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *