Local, News

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றார் கிழக்கின் கல்வி செயலாளர் குணநாதன்…..

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குமாரசிங்கம் குணநாதன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவும், குச்சவெளி, வெருகல் மற்றும் மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

உண்மையிலேயே இந்த கதிரைக்கு குணநாதன் சேர் மிகவும் பொருத்தமானவர். அனுர அரசினால் இனவாதமற்ற முறையில் தகுதியான திறமையான பலர் பொருத்தமான பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுவருவதை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் பல செயற்பாடுகளையும் காணக்கிடைக்கின்றது. இனவாதமற்று செயற்படும் அரசுக்கு நன்றிகள்.

வாழ்த்துக்கள் சேர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *