Blog
தற்போது காஸாவில் அதிசய திருமணம்…..
அபூர்வ சரித்திர தம்பதிகள்!
♦️ #அக்ரம் அபுபக்ர், #இஸ்ரேலிய சிறையில் #ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட #பலஸ்தீன கைதி!
♦️அபூபக்கர் திருமணம் செய்து #இல்லறவாழ்வில் இணைந்து ஒரு சில வாரங்களிலேயே இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டு #ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
♦️அவர் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு அனுப்பப்பட்ட போது, தன்னால் தனது மனைவியும் #வாழ்விழந்து ஆயுள் முழுவதும் #துன்புறக்கூடாது என்பதற்காகவும், தனது மனைவி இனிமேல் #புதிய இல்லறவாழ்வில் இணைந்து #சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காகவும், அவளை உடனடியாக #விவாகரத்து செய்திருந்தார்.
♦️இவ்வாறு ஆயுள் சிறை விதிக்கப்பட்டு 23 வருடங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் #அபூபக்கர் அண்மையில் #ஹமாஸ் – இஸ்ரேல் இடையே இடம்பெற்ற போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் செய்யும் திட்டத்தின் கீழ் #விடுதலை செய்யப்பட்டு மீண்டும் #பலஸ்தீன மண்ணில் கால்பதித்தார்.
♦️23 #வருடங்களின் பின்னர் #அதிஷ்ட்டவசமாக விடுதலை செய்யப்பட்ட அவர் அங்கிருந்து #கெய்ரோ சென்று தமது குடும்பத்தாரிடம் சங்கமித்தார்.
♦️கெய்ரோ (எகிப்து) சென்ற அவருக்கு ஒரு பெரிய #ஆச்சர்யம் காத்திருந்தது.
♦️23 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் #விவகாரத்து செய்து சென்ற அவரது #மனைவி இதுவரைக்கும் #எவரையும் திருமணம் செய்யாமலும், தவறான எந்தொவொரு செயல்களிலும் ஈடுபடாமலும், மிக #பொறுமையோடும் #விசுவாசத்தோடும் தன் கணவனுக்காக இன்னும் காத்த்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, விவகாரத்து செய்து சென்ற ஒரு கணவனுக்காக 23 வருடங்கள் ஒழுக்கத்தோடும் உறுதியான நம்பிக்கையோடும் காத்திருந்த அவரது மனைவியின் செயலைக்கண்டு கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கிய அக்ரம்அபூபக்கர் தனது மனைவிக்காக மீண்டும் தனது வாழ்வை அர்ப்பணிக்க போவதாக முடிவெடுத்து குடும்பம் மற்றும் நண்பர்கள், உறவுனர்களின் பங்களிப்புடன் அவளை மறுபடியும் திருமணம் செய்து கொண்டார்.
உறுதியான இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் கொண்ட அதிசயிக்கத்தக்க பலஸ்தீன தம்பதிகளின் இந்த சம்பவம் அரபுலகம் உட்பட உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




