Blog
இன்று ஜனாதிபதி முஸ்லிம் மற்றும் தமிழ் தலைவர்களை சந்தித்து பேசியது என்ன???
ஜனாதிபதி – தமிழ், முஸ்லிம் கட்சியினர் இன்று சந்திப்பு!
இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கை தினத்திற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்றது.
இதன்போது, அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








