Local, News

நேற்றும், இன்றும் வெள்ளநீர் அதிகரித்து பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் பகுதிகள்…

மாவிலாறு உடைப்பு – குறிஞ்சாக்கேணி பாலம் துண்டிப்பு –

3500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!

ஹெலிகாப்டர் உதவியையும் இவர்களுக்கு பயன்படுத்த
வேண்டியிருக்கிறது!

​வெள்ள அபாயம்! திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் பெரும் அனர்த்தம்!

​மாவிலாறு அணை உடைப்பெடுத்ததால் ஏற்பட்ட அதிவேக வெள்ளம், குறிஞ்சாக்கேணி தற்காலிகப் பாலத்தை மொத்தமாகச் சிதைத்துள்ளது!

​முக்கிய பாதிப்புகள்:

​ குறிஞ்சாக்கேணி தரைவழித் தொடர்பு முற்றாகத் துண்டிப்பு!

️ நடுத்தீவு, முனைச்சேனை, காக்காமுனை, கச்சக்கொடித்தீவு, குறிஞ்சாகேணி  ஆகிய 5 கிராம சேவக பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

​‍‍‍ சுமார் 3500 குடும்பங்கள் (15,000 மக்கள்) அத்தியாவசியப் பொருட்களின்றி சிக்கித் தவிக்கின்றனர்.

​உடனடி உதவி தேவை! உணவு, மருந்துப்பொருட்கள் இன்றி மக்கள் அவதி!

அரசாங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அவசர நடவடிக்கைகளை எடுக்கக் கோரிக்கை!

​உதவிகள் சென்றடைய, இந்தச் செய்தியை அதிகபட்சமாகப் பகிருங்கள்!

(கியாஸ் ஷாபி )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *