Local, News

குச்சவெளி தவிசாளர் கூலிப்படையால் தாக்கப்பட்ட ACMC முன்னால் பிரதேச சபை வேட்பாளர்….


2026.01.06 இன்று காலை திருகோணாமலை, புல்மோட்டை பிரதேசத்தில் ACMC கட்சியின் முன்னால் குச்சவெளி பிரதேச சபை அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளரும், புள்ளட் செய்தி ஊடகவியலாளருமான அக்ரம் என்பவர் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் உடைய குடும்ப உறுப்பினர்களால் கடுமையாக தாக்கப்பட்டு புல்மோட்டை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தவிசாளர் அவர்களுக்கும், அக்ரம் அவர்களுக்கும் போலீசாரால் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் இருவருக்கும் இடையில் வாய்வாதங்கள் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக பழி வாங்கும் நோக்குடன் இன்றைய தினம் தவிசாளர் அவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை வைத்து தன்னைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

( புல்லட் செய்திகளுக்காக: நிலாவெளி கிப்னாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *