Blog
மரம் நடுவோம், மண்வளம் காப்போம்; பத்தனையில்….
இன்றைய தினம் 13.02.2026 “மரம் நடுவோம் மண்வளம் காப்போம், சுற்று சூழலை பாதுகாப்போம், மற்றும் வளமான நாட்டை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் செல்மின் அமைப்பின் 10, 00,000 (பத்து லட்சம்) மரக்கன்றுகள் நடுகை வேலைத்திட்டதில் சூரியன் அதிரடி நற்பணி மன்றமும் செல்மின் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்து மரம் நடு நிகழ்வானது பத்தனை, தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில்
பிரதம அதிதிகளாக செல்மின் அமைப்பின் ஸ்தாபகர் திரு அருண் சண்முகலிங்கம் மற்றும் இலங்கையின் செல்மின் அமைப்பின் தலைவர் திரு. வாமதேவன் அகிலன் அவர்களும், சூரியன் அதிரடி மன்ற தலைவர் திரு ராஜ்குமார் செயலாளர் திரு மாரிமுத்து , சசிகலா மற்றும் பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
லிந்துலை ராஜ்குமார்




















