Blog
ஈரான் முன்னால் ஜனாதிபதி அகமது நஜாதும் மரணம்…..
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில், குறிப்பாக உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்முத் அஹமதிநிஜாத் (Mahmoud Ahmadinejad) இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி சர்வதேச ஊடகமான ‘Reuters’ நிறுவனத்தை மேற்கோள் காட்டி வௌியாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிக்க காலப்பகுதிகளில் ஒரு நெருங்கிய நண்பராகச் செயற்பட்ட அவர், உமா ஓயா திட்டத்தின் மூலம் இந்நாட்டு மின்சார மற்றும் விவசாயத் துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கியவர்.
அஹமதிநிஜாதின் ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவு மிகவும் பலமாக இருந்தது. அவர் இலங்கைக்கு விஜயம் செய்து இத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தமை இன்றும் பலரால் நன்றியுடன் நினைவுகூரப்படுகிறது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன். #war #sl #iran

