Blog
ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு அரசு தெரிவிக்காமை ஏன்?? MP ரவூப் ஹக்கீம்…..
ஈரானின் உச்சநிலை தலைவரின் மறைவுக்கு அரசாங்கம் கண்டனத்தையோ , இரங்கலையோ தெரிவிக்காதது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (4) அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
“சர்வதேச சட்டத்தை மீறி நட்பு நாடு ஒன்றின் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரானின் உச்சநிலைத்தலைவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது இந்த மரணம் குறித்து அரசாங்கம் இதுவரை கண்டனத்தையோ அல்லது இரங்கலையோ தெரிவிக்கவில்லை .”
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
“வெளிவிவகார அமைச்சு என்ற ரீதியில் எமது நிலைப்பாட்டை ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். இன்று நான் தூதரகத்திற்குச் சென்று அங்குள்ள இரங்கல் புத்தகத்தில் எனது பதிவை மேற்கொள்ளவுள்ளேன். நாட்டின் சார்பாகவே நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். அந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. உங்களுக்குத் தேவையானதை நான் செய்யவில்லை, நாட்டிற்குத் தேவையானதையே செய்கிறேன்.” என அவர் தெரிவித்தார்.

