Local, News

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்ததுல்லாஹ் கொமைனியின் மறைவுக்கு ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசலில் காயிபான ஜனாஸா தொழுகை

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்ததுல்லாஹ் கொமைனியின் மறைவுக்கு ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசலில் காஇபான ஜனாஸா தொழுகை

நூருல் ஹுதா உமர்

ஈரானிய தேசத்தின் ஆன்மீகத் தலைவர் எனக் கருதப்படும் ஷஹீத் இமாம் செய்யித் அலி காமெனெய் அவர்களின் மறைவிற்கும், அண்மைய மோதல்களில் உயிரிழந்த அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசலில் காஇபான ஜனாஸா தொழுகையும் விசேட துஆ பிரார்த்தனையும் இன்று (06) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதி தவிசாளர் பாறுக் நஜித் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.பி.எம். அறுஸ் தலைமையில் இடம்பெற்றது. கல்முனை மர்கஸ் அஸ் சஹாபா நிறுவனத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.. ஃபவாஹிர் ஷர்கி (அழ்ஹரி) அவர்களின் ஜும்ஆ பிரசங்கத்திற்குப் பின்னர் காஇபான ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.எம். ரியாஸ், சமூக ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இன்றைய தினம் ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோன்று காஇபான ஜனாஸா தொழுகையும் விசேட துஆ பிரார்த்தனைகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *