Blog
ரஷ்ய நிறுவனங்கள் தங்களுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்……
உலகளாவிய எரிசக்தி சந்தையில் உருவாகியுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, ரஷ்ய நிறுவனங்கள் தங்களுக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin தெரிவித்துள்ளார்.
கிரெம்ளினில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரான் போரின் பின்னணியில் உலகளவில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.
அத்துடன், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான Strait of Hormuz வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகம் விரைவில் பாதிக்கப்படவோ அல்லது தற்காலிகமாக முடங்கவோ வாய்ப்பு உள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.
உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகவும், இயற்கை எரிவாயு வளங்களில் முன்னணி நாடாகவும் உள்ள ரஷ்யாவின் இந்த கருத்து சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி, நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற ஐரோப்பிய நாடுகள் முன்வந்தால் ரஷ்யா வரவேற்கத் தயாராக உள்ளது என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் தங்களது எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த மீண்டும் ரஷ்யாவை நாடினால், அதற்கான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலும், ஈரானில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றங்களும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து உலகளவில் கவலை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Russia #Putin #Iran #HormuzStrait
MiddleEast

